தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட போதிலும், தோட்டங்களில் நாட்சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு கடந்த 1 மாதம் காலமாக 1000 ரூபாய் நிராகரிக்கப்பட்டு, 700 ரூபாய் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. 

இவ்விடயம் குறித்து, இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானிற்கு  பல மாவட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நாட்சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம்  வழங்கப்படாதமையை உறுதிப்படுத்துவதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை தொழிலாளர் திணைக்களத்தில்  (Labour Department)ஒப்படைக்கப்பட்டதையடுத்து, கடந்த ஒன்றரை மாதமாக முன்னெடுக்கப்பட்ட விடாமுயற்சியின் பிரகாரம்  அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய்  சம்பளம், நாட் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களுக்கும் சேர்த்தே உள்ளடக்கப்பட்டுள்ளது என முதலாளிமார் சம்மேளனத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 5ஆம் திகதியில் இருந்து நாட்சம்பளத்திற்கு வேலை செய்தவர்களுக்கான சம்பளம் 1000 ரூபாயாக வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.