தமிழ்  சினிமாவில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கொரொனா தொற்றுக்குள்ளாகி வருகின்றமை அவதானிக்கூடியதாகவுள்ளது. 

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவரே நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு (ரிலீஸ்) திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.