ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தெழிகம பகுதியில் இடம்பெற்றுள்ள வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனா்.

கலவானயில் இருந்து அட்டன நோக்கிச் சென்ற  இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த இருவரும் தெழிகம வத்தியசாலயில் அனுமதிக்க பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

இதேவேளை, குறித்த விபத்தில் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மது அருந்தி இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம். தொடா்பில் கித்துல்கல பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.