முகக்கவசம் அணியமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 617 பேரும் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் நேற்யைதினம் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.