இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புக்கள் இன்று பதிவாகியுள்ளன.

இன்றையதினம் 19 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை 1914 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 121 338 ஆக அதிகரித்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 101 763 பேர் குணமடைந்துள்ளதோடு , 18 013 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் 745 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 810 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 74 தனிமைப்படுத்தல் நிலையங்ககளில் 6705 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனர்.