நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 8 கிராம சேவகர் பிரிவுகளும் நாளை  (08) சனிக்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கலை 1, கொக்கலை 2, மீகாகொடை, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்லா மேலும் தெரிவித்தார்.