சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியை அவசர தேவைக்கு உலக நாடுகளில் பயன்பாடுத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த அனுமதியை உலக சுகாதார ஸ்தானம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம், (Tedros Adhanom)  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் “சினோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ்  குறிப்பிட்டார்.

இதையடுத்து, அனுமதி கிடைத்தவுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சினோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.