(செ.தேன்மொழி)
மஹரகம நகரசபை கூட்டத்தொடரின் போது இடம்பெற்ற மோதல் தொடர்பில் நகரசபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம நகரசபையின் இம்மாதத்திற்கான கூட்டத்தொடர் நேற்று இடம்பெற்றிருந்ததுடன் , இதன்போது ஆளுந் தரப்பு உறுப்பினரான சாவித்திரி குணசேகரவுக்கும் , நகரசபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவுக்கும் இடையில் முறுகல் நிலமை ஏற்பட்டிருந்ததுடன் , இந்த காணொளி சமூகவலைத்தலத்திலும் பதிவேற்றிப்பட்டிருந்தது.
இந்த காணொளியில் ஆளுந் தரப்பு உறுப்பினரான சாவித்திரி குணசேகர , நகரசபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவை தாக்குவதும் , பின்னர் தான் பொலிஸ் நிலையத்துக்கு செல்வதாகவும் , அவரது தொலைபேசியை எடுத்தவர்களை திரும்ப ஒப்படைக்குமாறு அவர் குறிப்பிடுவதும் அதில் பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து சாவித்திரி குணசேகர மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அண்மையில் நகரசபை உறுப்பினர்களின் அறையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று, சமூகவலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பிலே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , சாவித்திரி குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM