நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (06.05.2021) 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கினிகத்தேன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கந்தபளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி நால்வருக்கும், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், நோர்வூட் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.