இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின வதிவிடப் பணிப்பாளரும், பிரதிநிதியுமான  அப்துர் ரஹீம் சித்திக்கி உத்தியோகப்பூர்வமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டினேஷ் குணவர்த்தனவிடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தமது சான்றுப்பத்திரத்தை கையளித்தார்.

  

இந்த சந்திப்பின் போது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தல், ஊட்டச்சத்து மேம்பாடு, மற்றும் நிலைபேறான விவசாயத்தின் ஊடாக சிறியளவிலான விவசாயிகளின் நெகிழ்வுத்திறனை வலுப்படுத்தலில் அரசாங்கத்திற்கான ஆதரவு உலக உணவுத்திட்டத்தில் இலங்கையின் உறுதிப்பாட்டினை சித்திக்கி மீள்வலியுறுத்தினார்.

'தசாப்தங்கள் நீடித்த சிவில் யுத்தத்தின் முடிவு முதல் இலங்கை எட்டியுள்ள சமூகப்பொருளாதார தேர்ச்சி எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது' என சித்திக்கி குறிப்பிட்டார்.

  

'ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு சார்ந்த தற்போதைய சவால்களை அடையாளப்படுத்துவதற்கும், எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு என்னுடைய சக ஊழியர்களும், நானும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நிலைபேறான தீர்வுகளின் ஊடாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சமுதாயங்களின் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2 பட்டினின்மை என்பதற்கு அமைவாக 2022இல் எட்டப்பட வேண்டிய குறிக்கோள்களின் தொகுப்பை உள்ளடக்கிய உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் மூலோபாயத் திட்டம் குறித்து சித்திக்கி மற்றும்  அமைச்சர் குணவர்தன ஆகியோர் கலந்துரையாடினர்.

  

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1968இல் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமானது நாட்டில் செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், இலங்கை எட்டியுள்ள தேர்ச்சி குறித்தும் சித்திக் கலந்துரையாடினார்.

ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு துறைகளில் உறுதியான பின்புலத்துடன் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தில் 30 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தினை சித்திக்கி கொண்டிருக்கின்றார். முன்னதாக நைஜீரியாவின் வட மாநிலங்களை தளமாகக் கொண்ட பகுதி அலுவலகத்தின் தலைவராக, மிக உயர்ந்த அளவிலான அவசரநிலைகளில் வகைப்படுத்தப்பட்ட உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசர கால நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பாக இருந்தார்.

  

ஒரு அனுபவமிக்க மனிதாபிமான செயற்பாட்டாளராக சித்திக்கி உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பகுதிகளில் சிக்கலான அவசர நடவடிக்கைகளை நிர்வகித்து வந்துள்ளார். தற்போதுள்ள திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், வளங்களை திரட்டுவதற்கும், நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் வதிவிடப் பணிப்பாளராக பொறுப்பேற்கிறார்.