பிரதமருடனான முஸ்லிம் உறுப்பினர்களின் சந்திப்பில் சந்தேகம் - இம்ரான் மகரூப்

Published By: Digital Desk 3

07 May, 2021 | 04:16 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிப்பதற்கு இவர்கள் தயாராகிறார்களா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று வியாழனன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர். இதில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றின் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சந்திப்புக்களின் மூலம் அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க தயாராகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் எதிர்வரும் காலங்களில் இரண்டு முக்கியமான சட்டமூலங்களை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளது. ஒன்று துறைமுக நகரை மொத்தமாக சீனாவுக்கு தாரைவார்க்கும் சட்டமூலம். மற்றையது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஒழிக்கும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலமாகும்.

இந்த சட்ட்டமூலங்களுக்கும் இவர்களின் ஆதரவை பெறவா இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கேள்வி இன்று எமக்குள் எழுகிறது. ஆனால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவே இந்நிகழ்வுக்கு சென்றதாக அதில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுவது உண்மையெனில் அது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இவர்கள் கூறுவதை போன்று எந்த சமூக பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தர முடியும்?

அபகரிக்கப்படும் கிழக்கு மாகாண காணிகளை இவர்களால் மீட்க முடிந்ததா? அல்லது இதை தடுக்க முடிந்ததா? றிசாத் பதியுதீன் அசாத் சாலி போன்றவர்களின் கைதை தடுக்க முடிந்ததா? அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள புர்கா தடையை நீக்க முடிந்ததா? இருபதுக்கு ஆதரவளித்த பின்  இவர்களால் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது என்பதை இவர்களில் ஒருவராவது கூறுவார்களா?

எதிர்காலத்தில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சட்டமூலங்களுக்கு இவர்கள் ஆதரவு வழங்குவார்களேயானால் அது  சிறுபான்மை சமூகத்தின் பல சந்ததிகளை பாதித்து எமது இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குறியாக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25