காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித் இளைஞனை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அவரது உடமையில் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளட் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவரை கைதுசெய்தும் உள்ளனர்.

இந் நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.