தமிழக முதலமைச்சராக  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (07.05.2021) பதவியேற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார்.

தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.

அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.