கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

06 May, 2021 | 10:36 PM
image

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. 

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. 

இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது.

இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24