(செ.தேன்மொழி)

மஹரகம நகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மாஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஆறு பேர் பதவி விலகல் ; மஹரகம நகர சபையில் அமளிதுமளி | Virakesari.lk

மஹரகம நகரசபையின் கூட்டத்தின் போது ஆளுந் தரப்பினர் மத்தியில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததுடன் , இதன்போது பெண் உறுப்பினர் ஒருவர் இன்னுமொரு உறுப்பினரை தாக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , இன்று மாலை வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.