கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுகாதார பிரிவினர் குறித்த வங்கியை இன்று தற்காலிகமாக மூடி வைத்துள்ளதுடன், அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.