வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மீது பொலிசார் திடீர் சோதனை

Published By: Digital Desk 4

06 May, 2021 | 08:57 PM
image

வவுனியா நகர வீதி கடைகள் மற்றும் மரக்கறிகள், பழங்கள் விற்பனை நிலையங்கள் மீது பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாட்டில் கொவிட் 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியாவிலும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிசார் வீதியோரங்களில் வியாபாரம் செய்வோர், வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், அங்கு  சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிகையும் பொலிசாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத...

2025-03-19 15:48:10
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32