மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் மாட்டுப்பட்டியில் மாடுகளைத் திருடி ஜீப் ரக வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு கடத்திச் சென்ற மற்றும் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற 3 பேரை இன்று வியாழக்கிழமை (06) அதிகாலை கைது செய்ததுடன் 6 மாடுகள், ஜீப் ரக வாகனம் ஒன்று, இரண்டு உழவு இயந்திரங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை 1-30 மணியளவில் வவுணதீவு பொலிஸ் நிலய பொறுப்பதிகாரி, தவைமையிலான குழுவினர் வலையிறவுபால பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியை அண்மித்த பகுதில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு ஜீப் ரக வாகனம் ஒன்று வலையிறவு பாலத்தை நோக்கி பயணித்தபோது அதனை நிறுத்திசோதனையிட்டபோது அதில் வவுணதீவு பிரதேசத்திலிலுள் மாட்டுபட்டியில் உள்ள 6 மாடுகளை திருடி அதனை காத்தான்குடி பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதைக் கண்டுபிடித்தனர் இதனையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்ததுடன் 6 மாடுகள், ஜீப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டனர்.
அதேவேளை இலுப்படிச்சேனை கைலியாமடு ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து இரு உழவு இயந்திரங்களில் எடுத்துச்சென்ற 3 பேரை கைது செய்ததுடன் இரு உழவு இயந்திரங்களை ஆற்று மண்ணுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை வவுணதீவு பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பட்டியில் இருந்து அண்மைக் காலமாக 20 மாடுகள் திருட்டுப் போயுள்ளதாகவும் மாடுகளுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 மாத கலத்திற்கு மாடுகளை விற்பதற்கும்? இறைச்சிக்கு வெட்டுவதற்கும் வவுணதீவு கால்நடைகள் சுகாதார வைத்தியர் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM