இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 810 பேர் இன்றையதினம்(06.05.2021) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,885 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 117,529 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.