ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார்.

கடந்த மாதம் குருகிராமில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20ம் திகதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயந்த் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.