தெற்கிலும் இனவாதம் காணப்படுகிறது. அவ்வாறே வடக்கிலும் சிலரால் இனவாதம் பரப்பப்படுகிறது. இந்நிலையில் இனவாதமானது சமாதானத்திற்கு விரோதமானது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தேசிய வேலைத்திட்டமான குளத்தை அண்டிய கிராம அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார். இதனையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனவாதம் சமாதானத்திற்கு விரோதமானது. எனவே இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும். யுத்தத்ததை எவரும் விரும்புவது கிடையாது. இதேவேளை அபிவிருத்தியில் தெற்கில் முன்னெடுக்கப்படுகின்ற பணிகளே வடக்கிலும் முன்னெடுக்கப்படும். இதில் வேறுபாடு கிடையாது.

இத்தகைய நிலையில் குளத்தை அண்டிய கிராம அபிவிருத்தி எனும் வேலைத்திட்டதில் தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் உள்ள குடும்பங்கள் அனைவரினதும் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களின் வாழ்வாதார மற்றும் மீன் பிடியை தவிர ஏனைய தொழில்கள் பற்றியும் ஆராய்ந்து அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த வேலைத்திட்டம் அம்பாந்தோட்டையிலும்,பொலனறுவையிலும் தற்போது கிளிநொச்சியில்ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இதற்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத்தெரிவித்தார்.
இதேவேளை தற்போது இரணைமடுகுளத்தின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் அதற்குள் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கான உதவி திட்டங்கள் வழங்கப்படுமா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தற்போது உத்தரவாதம் அளிக்கக் கூடியவாறு கருத்துநிலையில்லை. இங்கு வசிக்கின்ற மீனவக் குடும்பங்களில் விவசாய வேலைகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். இதில் மீன்பிடியை மட்டும் பிரதான தொழிலாக செய்துவருபவர்களின் விபரங்களைத் திரட்டி அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வழங்க எதிர் பார்க்கின்றேன் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM