(க.கிஷாந்தன்)

அட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கு பதிலாக “லைட்டர்” வழங்குவதாகவும் அதற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பெட்டி தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் இன்மையால் இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக தீப்பெட்டிகள் தயாரிக்கும் கம்பனியாளர்கள் தெரிவித்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் 40 ரூபாவிலிருந்து 50 ருபா வரை பணம் கொடுத்து “லைட்டர்” வாங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் வெடிமருந்துகள் கிடைக்கப்பெற்றதுடன் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவம் என கம்பனியார்கள் தெரிவிக்கின்றனர்.