மாலபே தனியார் வைத்திய கல்லூரியை மூடுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தி, அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம்  லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, ஹம்பாந்தோட்டை, காலி, பதுளை, அனுராதபுரம், புத்தளம் போன்ற இடங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.