14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டித் தொடர் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு (பி.சி.சி.ஐ.) இந்திய மதிப்பில் 2000 கோடி ரூபா ( இலங்கை மதிப்பில் 5,400 கோடி ரூபா) வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், ஒளிபரப்பு மற்றும் அனுசரணை மூலமாக கிடைக்கும் வருமானமே பிரதானமாகும் என இந்திய செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

அணிகள் சிலவற்றிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இம்முறை ஐ.பி.எல். போட்டித் தொடர் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இப்போட்டித் தொடரின் 60 போட்டிகளில் 29 போட்டிகள் மாத்திரமே நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.