பொலிவூட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரின் தந்தையான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு கடந்தவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெங்களூரில் குடும்பத்தினரை காண வந்த  தீபிகா படுகோனேக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமது உடல் நிலைபற்றி தீபிகா படுகோன் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.