(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன்  என்.பி  சபையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே .ஸ்ரீதரன்  எம்.பி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழக சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.  ஸ்டாலினுக்கு இந்த உயரிய சபையில் தமிழ் மக்கள் சார்பாக  எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் அவருடன் கூட்டணி அமைத்து வெற்றபெற்ற வைகோ ,திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தலைவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.  ஸ்டாலின் இலங்கைத்தமிழ் மக்களை கருத்தில் எடுத்து அவர்களின் எதிர்கால இருப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை வெற்றியின் விளிம்பைத்தொட்ட சீமான்,கமல்ஹாசன் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் எதிர்க்கடசியாகப் போகும் அ .தி.மு.க.வும் இலங்கைத் தமிழர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோருகின்றோம் என்றார்.

   .