இன்றைய திகதியில் எம்மில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் தொண்டை வலி உள்ளிட்ட பல அறிகுறிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தால், அவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பாதிப்பிற்குரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

 அத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு நல்ல ஓய்வு மற்றும் சத்துணவை சாப்பிட்டு, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

ஐந்து தினங்களுக்கு பிறகும் உடலில் சோர்வு, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வு போன்றவை ஏற்பட்டால்.. கொரோனா தொற்று தீவிரமடைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தருணத்தில்தான் நுரையீரல் பாதிப்பு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் மருத்துவரின் பரிந்துரையுடன் பி. டி. ஸ்கேன் (PET Scan) எனப்படும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் எம்மைத் தாக்கியிருக்கும் மிதமான கொரோனாத் தொற்று வீக்கமடைந்து தீவிரமடையத் தொடங்கும். இதன் போது சிலருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு,மூச்சு திணறல் ஏற்படக்கூடும். இதன் போதுதான் நுரையீரல் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து அவர்களுக்கு வென்டிலேட்டர் மற்றும் ஓக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளித்து கொரோனாத் தொற்று பாதிப்பை குணப்படுத்த இயலும்.இதன் போது அவர்களுக்கு ஸ்டீரொய்ட் மருந்துகளும், இரத்தம் உறையாமைக்கான மருந்துகளுக்கு வழங்குவார்கள்.

இதை தவிர்த்து கொரோனாத் தொற்று பாதிப்பின் தொடக்கநிலை அறிகுறிகள் ஏற்பட்டவுடன் பி டி ஸ்கேன் எனும் பரிசோதனையை மேற்கொண்டால்... எதிர்காலத்தில் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். அதே தருணத்தில் கொரோனாத் தொற்றின் தொடக்க நிலையில் பி டி ஸ்கேன் பரிசோதனை செய்வதால், தொற்று பாதிப்பை துல்லியமாக கண்டறிய இயலாது. மேலும் ஒரு முறை பி.டி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது என்பது, 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்பதால் அத்தகைய பிடி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.

டொக்டர் ரன்தீப்

தொகுப்பு அனுஷா.