உலகம் முழுவதும் உள்ள சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிமையான செய்தி வெளியாகியிருக்கிறது.

கபாலி படம் வெளியானபோது மலேசியாவில் அவரின் தோற்றத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கார்பன் சிலை விற்பனைக்கு அறிமுகமானது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபாலியின் கார்பன் சிலைகள் விற்பனையாகியிருக்கும் இந்த நிலையில் இந்த சிலை தற்போது சிங்கப்பூரிலும் அறிமுகமாகியிருக்கிறது.

40 சிங்கப்பூர் டொலர் மதிப்பில் விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கபாலி சிலையின் உயரம் 16.5 செ.மீற்றர். இதன் எடை 300 கிராம். இந்த சிலை பொலிவினைய்ல் என்ற மலப்பொருளாலும் சேகரிக்கப்பட்ட கார்பன் துகள்களாலும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ரஜினியின் ரசிகர்களை விட மகிழ்ச்சி என்று கூறி சிறிய குழந்தைகள் இந்த சிலையை வாங்கித் தருமாறு பெற்றோர்களை கேட்கும் போது ரஜினி அடுத்த தலைமுறைக்கும் அறிமுகமாகிறார் என்கிறார்கள் சுப்பர் ஸ்டாரின் பக்தர்கள். 

தகவல் : சென்னை அலுவலகம்