கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு! |  Virakesari.lk

அதன்படி, நாளை காலை 5 மணி முதல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.