மரணத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய நோயாக இருக்கும் இதயநோயிலிருந்து விடுபட இளம் வயதிலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டு வந்தால் நடுவயதில் சடுதியான மரணம் ஏற்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இதய நோய்களில் திடீர் மரணத்தை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது மாரடைப்பு (Myocardial Infarction) எனும் நோயாகும்.இதயத் தசைகளுக்கு குருதியை வழங்குகின்ற Coronary Heart Disease இல் உச்சமான நிலை இதுவேயாகும்.சாதாரண நெஞ்சு வலியாக வந்துபோகும் அஞ்ஜைனாவாக ஆரம்பித்து படியேறுதல், வேலை செய்தல் முதலானவற்றின் போது மார்பு வலியும் இயலாமையும் தோன்றலாம்.இந்த நிலையில், வைத்திய பரிசோதனை மேற்கொண்டு உரிய பரிகாரம் பெற்றால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.இதயத்திற்குள் குருதி இருப்பினும் இதயத் தசைகள் அவற்றை நேரடியாக பெறமுடியாது.கொறனறி நாடிகள் மூலமே இவை தமக்கான இரத்தத்தை பெறுகின்றன.கொலஸ்ரோல் படிவு கொறனறி நாடியின் உட்புறமாக ஏற்பட்டு சில இடங்களில் பகுதியாகவோ முழுமையாகவோ அடைப்பு ஏற்படும் போது, இதயத்தின் தசைகளுக்கான இரத்தத்தில் போதாமை ஏற்படுகின்றது. இதனால் ஒட்சிசனின்றி தசையின் சில பகுதிகள் இறக்கின்றன. இதனால் இதயத்தின் செயற்பாடும் பாதிக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது.
இதயம் ஒழுங்கின்றி செயற்படும் நிலையில் இதயத்துடிப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஒழுங்கின்றி இதயம் துடிப்பதை Arrhyth mia என்கிறோம். இதுவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம்.
குருதிக் குழாய்களுக்குள் கொலஸ்ட்ரோல் படிவதால் தசைகள் குருதியை பம்ப் பண்ணும் போது கூடுதலாக தடை ஏற்படுகிறது. இதனால் இதய தசைகளின் வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. இதனால் தசைகள் பலவீனமடைந்து இதயம் பெருப்பமடைவதுடன் அதன் இயல்பான தொழிற்பாடும் பாதிப்புக்குள்ளாகின்றது. இதனால் உடலுறுப்புகளுக்கு ஒட்சிசனையும் உணவுக்கூறுகளை வழங்குவதும் தடங்கலடைகின்றன. இதயத் தசைகள் சீராக இயங்க முடியாமையாலேயே இதய செயலிழப்பு ஏற்படுகின்றது. இதனால் குருதிச்சுற்று பாதிப்புறும்போது களைப்பு, இழைப்பு, பாதவீக்கம், மூச்சு எடுப்பதில் சிரமம் என பல்வேறு அறிகுறிகளுடன் நோய் வெளிப்படுகின்றது. இதய செயலிழப்பு தீவிரமாகும்போது மரணமும் ஏற்படலாம்.
இதயத்திலுள்ள இரத்தச்சுற்று சீராகவும் கலப்பின்றியும் செயற்படுவதற்கு வால்வுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. வால்வுகளில் குறைபாடு ஏற்படுகின்ற போது இரத்தச்சுற்று பாதிப்புக்குள்ளாகும். இதனால் இதயத்தில் மாத்திரமின்றி இரத்தச்சுற்றிலும் பாதிப்பு ஏற்படும். வால்வுகளில் பாதிப்பு பிறவியிலிருந்தோ இடையிட்டோ ஏற்படலாம். இவற்றை சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யாவிட்டால் ஆபத்தான நிலைகள் ஏற்படலாம்.
இதயத் தசைகள் வழமைக்கு மாறாக தடிப்பாக பெருத்து அல்லது விறைப்படைந்து காணப்படுவதால் இதயத் தொழிற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் நிலையை Cardio Myopathy என்கிறோம். இவர்களுக்கு பூரண சிகிச்சையளிப்பது சிரமம். இவர்கள் இயல்பாக வாழ சிரமப்படுவார்கள். சிகிச்சை மூலம் ஓரளவு இயல்புத் தன்மையை ஏற்படுத்த முடியுமே அன்றி குணமாக்க முடியாது. இளவயது மரணங்களை இது ஏற்படுத்துகிறது. அநேகமாக பரம்பரையாக பிறவியில் இந்நோய் ஏற்படுகின்றது.
இதயச் சுவர்களில் சிலருக்கு துவாரம் இருப்பதனால் ஒட்சியேற்றப்பட்ட இரத்தமும் ஒட்சியேற்றப்படாத இரத்தமும் கலப்புறுகின்றன. இதயம் சரியாக செயற்பட்டாலும் கூட இவர்களின் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன், உணவு என்பன கிட்டுவதில் சிரமம் ஏற்படுகின்றது. பிறவிக்குறைபாடாக ஏற்படும் இந்த துவாரம் பலரில் வளரும் போது நிரவிவிடுகின்றது.எனினும் சிலரில் இது நிரவுவதில்லை.இவ்வாறானவர்களில் சத்திரசிகிச்சை மூலமே குணமாக்கலாம்.
இதய நோய்கள் ஏற்படாமலிருக்க
இதயநோய்களில் மிக பரவலாகவும் ஆபத்தாகவும் இருக்கும் மாரடைப்பு, இதய செயலிழப்பு என்பன ஏற்படாமலிருக்க மனிதரின் வாழ்க்கை முறையே பிரதான காரணமாக இருக்கின்றது. பரம்பரை காரணிகள் இருப்பினும் பலரில் அவர்களது தவறான வாழ்க்கை முறையே இந்த நோய்களை ஏற்படுத்துகின்றது.
இதய நோய்களை ஏற்படுத்தும் பிரதான காரணிகளாக தவறான உணவுப்பழக்கமும் வாழ்க்கை முறையுமே இருக்கின்றன. சமபோஷாக்கற்ற அதிக கொழுப்பு, மாப்பொருள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்கிறது. நவீன உலகின் இயங்குதலற்ற வாழ்வும் அப்பியாசமின்மையும் மேலதிக சக்தியை எடுக்கத் தவறுகின்றமையால் கொழுப்பு உடலில் தேங்கி குருதிக் குழாய்களுக்குள் படிகிறது. இதன் காரணமாக ஏற்படுகின்ற உயர் கொலஸ்ட்ரோல் அடைப்புகளை ஏற்படுத்தி குருதிச்சுற்றையும் பாதிக்கின்றது. உடல்எடை அதிகரிப்பு, உடற்பருமன் என்பன அதிகரித்த கொழுப்பு குறிப்பாக கொலஸ்ட்ரோல் படிவு என்பவற்றிற்கு வித்திடுகின்றன. புகைபிடித்தல் குருதி குழாய்களில் கொலஸ்ட்ரோல் படிவதை அதிகரிக்கின்றது.
மாரடைப்பை துரிதமாக ஏற்படுத்தும் இரு நோய்களாக நீரிழிவும் உயர்குருதி அழுத்தமும் இருக்கின்றன. இதய நோய்கள் ஏற்படாமல் இருப்பதை தடுக்க இவ்விரு வகை நோயாளர்களும் தமது நோய் நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உரிய சிகிச்சை மற்றும் இயங்கு நிலையான வாழ்க்கை, கட்டுப்பாடான உணவு என்பவற்றினால் குருதி குளுக்கோஸின் அளவையும் குருதி அமுக்கத்தையும் உரிய அளவுக்குள் தொடர்ந்து பேணினால் இதய நோய்கள் ஏற்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிறுவயதிலிருந்தே எடை அதிகரிப்பையும் உடற்பருமனையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் வளர்ந்த பின்னரும் உடல் எடை சுட்டெண் (BMI) எல்லைக்குள் உடலின் எடையை பேணமுடிவதுடன் நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் என்பன ஏற்படுவதை பிற்போட அல்லது தவிர்க்கமுடியும்.
இந்நோயிலிருந்து விடுபட செய்ய வேண்டியவை
* உணவில் கட்டுப்பாடு
* உடலியக்கம் அல்லது தேகாப்பியாசம்
* புகை பிடிக்காதிருத்தல், மதுவை மட்டுப்படுத்தல்
* உடல் எடையை கட்டுப்படுத்தல்
* உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, உயர் கொலஸ்ரோல் என்பன ஏற்படாமல் தடுத்தல். ஏற்பட்டவர்கள் நோயை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்.
இதைச் செயலாக்க
*இரத்த அழுத்தத்தை இடையிடையே பரிசோதியுங்கள்.
*குருதி குளுக்கோஸின் அளவை
சோதியுங் கள்.
*கருதி கொலட்ஸ்ட்ரோலின்
அளவை சோதியுங்கள்.
இவை அதிகரித்திருப்பின் உரிய சிகிச் சையை பெறுங்கள். இதன்மூலம் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM