கடந்த 48 மணி நேரத்தில் வீரர்கள் மற்றும் ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2021 ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 29 லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 4 வீரர்களும், அணியின் பல உறுப்பினர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.