கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நான்கு தபால் நிலையங்கள் மற்றும் 28 துணைத் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தபால் சேவைகளில் தாமதங்கள் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் மாத்திரம் தாமதம் ஏற்படக் கூடும் என்றும் குறிப்பிட்டார்.

கொம்பனத்தெரு, வாழைத்தோட்டம், ஹோமாகம மற்றும் கொழும்பு - 2 இல் அமைந்துள்ள இறைவரித் திணைக்களத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் ஆகிய நான்கு தபால் நிலையங்களே மூடப்பட்டுள்ளன.