இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீதமுள்ள அனைத்து போட்டிகைளயும் மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகமதாபாத் மற்றும் டெல்லியில் கொவிட்-19 பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நடவடிக்கை குறித்து ஆராயப்படுகிறது.

அதன்படி 2021 ஐ.பி.எல். போட்டிகளை மும்பையின் வான்கடே, டி.ஒய் பாட்டீல் மற்றும் பிராபோர்ன் ஆகிய மூன்று மைதானங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு தொடரின் முதல் பாதிலேயே வான்கடே மைதானத்தில் பத்து போட்டிகள் அரங்கேறியுள்ளன. மும்பையின் மற்ற இரு மைதானங்களும் பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான நேற்றைய லீக் ஆட்டம் கொவிட்-19 தொற்று நிலைமைகள் காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிபுணர்களின் மேற்பார்வையில் கொரோனா தொற்றுக்குள்ளான சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவரத்தியுடன் கொல்கத்தா அணியினர் கடுமையான தனிமைப்படுத்தலின் கீழ் தற்சமயம் உள்ளனர்.

வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது சுற்று சோதனையில் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டதுடன். மற்ற அனைத்து குழு உறுப்பினர்களும் எதிர்மறையைகா சோதித்துள்ளனர்.

மருத்துவக் குழு தொடர்ந்து இருவருடனும் தொடர்பில் உள்ளது மற்றும் அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. 

அதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று உறுப்பினர்கள் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் ஒரு பஸ் கிளீனர் ஆகியோர் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாளை நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ‍ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  

கொவிட்டின் ஆபத்தான இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடி வருவதால் 5 வீரர்கள் ஏற்கனவே நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகி விட்டனர்.

ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ரோயல்ஸ்), லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ரோல்ஸ்), ரவிச்சந்திரன் அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), ஆடம் ஜாம்பா (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு) மற்றும் கேன் ரிச்சர்ட்சன் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியே வீரர்களே தொடரிலிருந்து விலகியவர்கள் ஆவர்.