இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 4.01 இலட்சம், நேற்று முன் தினம் 3.92 இலட்சம், நேற்று 3.68 இலட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  2 கோடியே 2 இலட்சத்து  82 ஆயிரத்து 833 ஆக உள்ளது.  

கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 47ஆயிரத்து 133 ஆகும்.  நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து  32 ஆயிரத்து 921 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.