யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என  பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 பொதிகளில் கஞ்சா போதைப்பொருள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்திய வானும் மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை, சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.