டுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை நிபுணராக பணிபுரிந்து வரும் முஹமது மிஷ்பக் என்ற இலங்கை பிரஜை 12 மில்லியன் ரூபா ( 12 டிராம் (3.3 மில்லியன் டொலர்) ) பெறுமதியான மெகா ஜாக்பொட்டை  வென்றுள்ளார். 36 வயதுடைய  முஹமது மிஷ்பக் கடந்த 10 வருடங்களாக தனது வேலை நிமித்தம் டுபாயில் தனது நண்பர்களுடன் வசித்து வருகின்றார்.

தனது நண்பர்கள் சகிதமே இலக்கம்  054978 என்ற  மெகா ஜாக்பொட் டிக்கெட்டை அவர் வாங்கியுள்ளார். 

ஆகவே இந்த வெற்றிப் பணப்பரிசை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப்போவதாகவும் முஹமது மிஷ்பக் கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஜாக்பொட்  நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததுமே நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.

தனது சந்தோஷத்தை கூற வார்த்தைகளே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதில் தனக்கு கிடைக்கும் பங்கினை தனது தந்தையின் மருத்துவ செலவுக்கும் தனது குடும்ப செலவுக்கும் பயன்படுத்த போவதாகவும் மாதத்திற்கு 7000 டொலர் சம்பாதிக்கும் எனக்கு இந்த பணப்பரிசு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.