டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Published By: Digital Desk 2

04 May, 2021 | 12:04 PM
image

இராஜதுரை ஹஷான்

உத்தேச புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினர் எதிர்வரும் ஜூன் மாதம் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார்கள்.

டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.  தேர்தல் முறைமை புதிய அரசியலமைப்பின் பிரதான அம்சமாக கருதப்படும் என  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

களனி ரஜமஹ விகாரையில் மத  வழிபாட்டில் ஈடுப்பட்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அவரது அரசியல் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. 

 அரசியலமைப்பு குறித்து  தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய  இரு பிரதான வாக்குறுதியில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அரச நிர்வாகத்திற்கு தடையாக இருந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை  பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

உத்தேச புதிய  அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற   நிபுணர் குழுவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   நிபுணர் குழுவினர் அரசியல் கட்சிகளிடமும், சிவில் அமைப்பினரிடமும் மற்றும் பொது மக்களிடமிருந்தும் அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகளை  கோரியுள்ளார்கள்.

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான  முழு வரைபினை நிபுணர் குழுவினர் எதிர்வரும் ஜூன் மாதம் அரசாங்கத்திடம் கையளிப்பார்கள். இவ்வருட இறுதிக்குள்  புதிய அரசியலமைப்பினை  நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம். எக்காரணிகளுக்காகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10