எம்.எஸ்.தீன் 

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் ஏப்ரல் 21 தாக்குதல் தாரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  

இலங்கை மற்றும் பூகோள அரசியலில் இவரது கைது பற்றிய பேச்சுக்களே தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரை விடுதலை செய்யுமாறு ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. ரிஷாட் பதியுதீனின் கைது முஸ்லிம்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில், ரவூப் ஹக்கீமின் குடியுரிமையை பறிப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவும், ரிஷாத்தும்

  ரிஷாட் பதியுதீன், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெரும் செல்வாக்குமிக்க அமைச்சராக இருந்தார். அந்த ஆட்சியில் தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பெருமளவுக்கு பூர்த்தி செய்திருந்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் பதியுதீன் இறுதி நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார். இதனால், முஸ்லிம் காங்கிரஸும் மைத்திரியை ஆதரிப்பதற்கு முடிவு செய்தது. முஸ்லிம் கட்சிகளின் இந்த முடிவுக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்கள் அதிகம் வெறுப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், மக்களின் விருப்பத்திற்கு அமைய முடிவுகளை எடுக்க வேண்டிய அரசியல் சூழல் இக்கட்சிகளுக்கு ஏற்பட்டன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.