கல்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் சந்தேகநபர் வசமிருந்து 1,39,500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்பிட்டி நகரைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.