களுத்துறை – கொஹோலான பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கொஹோலான பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என களுத்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனவும் கொலை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.