அமோக வெற்றி பெற்ற “செல்வந்தன், புருஸ்லீ - 2 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “இதுதாண்டா பொலிஸ்” தெலுங்கில்“ ஆகடு “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “இது தாண்டா பொலிஸ்“ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி, சோனு சூத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் சுருதிஹாசன் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
ஒளிப்பதிவு - கே.வி.குகன் / இசை - எஸ்.எஸ்.தமன்
பாடல்கள் - கன்னடா கலாராஜன், அருணபாரதி, மீனாட்சிசுந்தரம்.
ஸ்டன்ட் - விஜய், ராம்லஷ்மன், ஸ்டன்ட் சிவா.
இணை தயாரிப்பு - வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா
தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத்.
வசனம், தமிழ் உருவாக்கம் - ARK.ராஜராஜா
இயக்கம் - சீனு வைட்லா.. இவர் இயக்கத்தில் வெளியான “டி“ ரெடி “வெங்கி,“ கிங் “நமோ வெங்கடேஷ்“ தூக்குடு, பாட்ஷா, துபாய்சீனு, போன்ற படங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளது.
படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் ARK.ராஜராஜாவிடம் கேட்டோம்...
புருஸ்லீ -2 படத்தை இயக்கிய சீனு வைட்லா இயக்கியிருக்கும் படம் கமஷியல், குடும்பசென்டிமென்ட், காதல், காமெடி கலந்த நூறு சதவீத கலவை தான் இந்த படம். ஒரு பொலிஸ் அதிகாரி ஒரு அனாதை சிறுவனை எடுத்து வளர்க்கிறார். அவனுக்கு சிறு வயதிலிருந்தே தான் மிகப்பெரிய பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் அவன் இலட்சியம். ஆனால் சிறு வயதில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தினால் அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறான். அவன் குடும்பத்தாருக்கு பெரிய பிரச்னை உருவாகிறது. இறுதியில் வில்லன்களை எப்படி பழிவாங்குகிறான்..அவன் பொலிஸ் ஆனானா இல்லையா.. குடும்பத்தை பார்த்தானா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் விரைவில் வெளியாக உள்ளது.
தகவல் : சென்னை அலுவலகம்