சிவலிங்கம் சிவகுமாரன்
" இன்று 3 ஆம் திகதி திங்கட்கிழமை உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது "
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் உலகின் சுமார் 180 நாடுகளில் நிலவும் பத்திரிகை சுதந்திரம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2021 ஆம் ஆண்டில் இலங்கை 127 ஆவது இடத்தை வகிப்பதாக பத்திரிகை சுதந்திர குறியீடு பற்றிய அட்டவணை கூறுகின்றது.
பத்திரிகை அல்லது ஊடக சுதந்திரமானது தொடர்ந்தம் மோசமான இடத்திலுள்ளதை இது காட்டி நிற்கின்றது. இப்படியலில் முதல் மூன்று இடங்களை முறையே , நோர்வே, பின்லாந்து ,டென்மார்க் ஆகிய நாடுகள் வகிக்கின்றன.
30 ஆண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னரும் கூட இலங்கையில் ஊடக சுதந்திரம் ஏன் மேம்படவில்லையென்ற கேள்வி மிக முக்கியமானது. மாறி மாறி எந்த அரசாங்கம் வந்தாலும் கூட இலங்கை போன்ற நாடுகளில், ஜனநாயகத்தை தாங்கும் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் நிலைமை மிக மோசமானதாகவே உள்ளது.
யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் இன்னும் தொடரும் நிலை உள்ள அதேவேளை கடந்த இருபது வருடங்களில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் பற்றிய விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், எங்ஙனம் ஊடக சுதந்திரம் பற்றி பேச முடியும் என்ற கேள்வி இயல்பானதே.
எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் தாராளமா உள்ளது, ஊடகவியலாளர்களுக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ அச்சுறுத்தல்கள் இல்லை என்றும் கூறும் அரசாங்கங்கள், கடந்த காலங்களில் இத்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் அச்சுறுத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பதில் காட்டும் அசமந்தமானது. ஊடக சுதந்திரம் பற்றிய அச்சுறுத்தல்களை அதிகரிக்கச் செய்கின்றது. மட்டுமன்றி இத்துறையில் பணியாற்றுபவர்கள் அல்லது பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்போரிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது என்றால் மிகையாகாது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM