ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.