தி.மு.க ஆறாவது முறையாக ஆட்சி செய்ய கட்டளையிட்டு உள்ள மக்களுக்கு அக்கட்சியின் தலைவர் தி.மு.க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
''ஆறாவது முறையாக ஆட்சியை செலுத்த கட்டளையிட்டு உள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்க ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டு பத்திரமாக நினைத்து இதனை பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக நினைக்கிறேன். எத்தனை சோதனைகள்- வேதனைகள்- பழிச் சொற்கள்- அவதூறுகள் இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!. உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காகவே உழைப்பேன்.
என்றென்றும் என் சிந்தனையும், செயலும் மக்களுக்காகத்தான். கோடானகோடி உடன்பிறப்புகளுக்கும் நன்றி. தோள் கொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் -தொண்டர்கள்- நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகளை தெரிவித்து வரும் அனைத்து கட்சி தலைவர்கள், சமய சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் அமையப் போவது நாம் அனைவரும் சேர்ந்து நடத்தப்போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது.
அதை தமிழகம் இன்று சொன்னது. இனி தமிழகம் வெல்லும்! அதை நாளைய தமிழகம் சொல்லும்!' என்று அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்கும் மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த அமைச்சருமான ராஜ்நாத் சிங், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார், பீஹார் மாநில எதிர்கட்சி தலைவரும், ராஷ்ரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி தொழிலதிபர்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM