அறுதிப் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைக்கிறது - முதல்வராகிறார் ஸ்டாலின்

Published By: Digital Desk 4

02 May, 2021 | 06:59 PM
image

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் நிலையில் முன்னணி வகித்து வருவதால் ஆட்சி அமைப்பது உறுதியாகியிருக்கிறது. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

16 ஆவது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியன்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்று, தேர்தலை சந்தித்தன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இருபெரும் திராவிட கட்சிகளுடன் ரி. ரி. வி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான இஸ்லாமிய கட்சி ஆகியவை ஒரு கூட்டணியாகவும், திரை நட்சத்திரம் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்து தலைமையிலான  இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. இதன்மூலம் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. பல தொகுதிகளில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்கள் கூட சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர்.

ஏப்ரல் 6ஆம் திகதியன்று மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டுக் கட்டங்களாக நடைபெற்றது. இதன் காரணத்தினால் ஏப்ரல் 6ஆம் திகதி அன்று பதிவான வாக்குகள், மே 2 ஆம் திகதியன்று எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழகத்தில் உள்ள  75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரானா தொற்று பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் அதிகாரிகள், வாக்கு எண்ணும் அலுவலர், அரசியல் கட்சிகளின் முகவர்கள் என அனைவரின் முன்னிலையிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் ஆணையம் இதற்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

முதலில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட  எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்தது.

காலை 9 மணி முதல் முன்னனி நிலவரங்கள் வெளிவர தொடங்கியது. இந்தமுறை அதிமுகவை விட அதிக இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்தது. மாலை ஆறு மணி நேர நிலவரப்படி திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் விரைவில் முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார். 

இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு திராவிட அரசியல் ஆளுமைகள் மறைவிற்குப் பிறகு, மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு, மு க ஸ்டாலின் முதல்வராகிறார்.  

இந்த தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளர்கள் நேரடியாக 173 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து, வெற்றி முகத்துடன் வலம் வருகிறார்கள். இதன் காரணமாக திமுக தனிப்பெரும்பான்மையுடன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச் வசந்தகுமாரின் மகனும், திரைப்பட நடிகருமான விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் 1, 21, 262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவினார்.

தேர்தல் சுவராசிய துளிகள்

• திமுக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவரும், திமுகவின் முதல்வர் வேட்பாளருமான மு க ஸ்டாலின், 40,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

• அதிமுக சார்பில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி 1,32,496 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்த திமுக வேட்பாளரை விட 76,580 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

• மக்கள் நீதி மையம் சார்பில் அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 15 சுற்று வாக்குகளின் எண்ணிக்கைப் படி இவர் 1, 200 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

• நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், 30,781 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறார். ஆனால் அக்கட்சி போட்டியிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான வாக்குகளை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இந்தக் கட்சி தமிழகத்தில் பதிவான வாக்குகளில் பதினேழு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, தங்களுடைய கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டதுடன், 'அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி' என்ற அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

• ரி ரி வி தினகரனுடன் கூட்டணி அமைத்து, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக கட்சியின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் 17,032 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

• கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ரி.ரி. வி தினகரன் 33,127 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

•   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள்

4,57,76,311

திமுக கூட்டணி பெற்ற வாக்குகள்

1,45,77,951 (31.85)

திமுக கூட்டணி பெற்ற வாக்குகள்

1,28,82,186 ( 28.14)

நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள்

17,12,168 (3.74)

மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள்

6,95,844 (1.54)

• தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பென்ஜமின், ராஜேந்திரபாலாஜி, சி வி சண்முகம், வல்லமண்டி நடராசன், சரோஜா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41