(எம்.மனோசித்ரா)
ஆட்பதிவு திணைக்களத்தின் சகல சேவைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குனதிலக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் , மாகாண அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்காக பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளை அலுவலகங்களை நாட முடியும்.
எதிர்வரும் நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் முன்னரே விண்ணப்பித்து தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் , பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளவர்கள் உள்ளிட்ட அவசர தேவையுடையவர்கள் தமது விபரங்களை , 011-5226126 , 011-5226100 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பிரதான அலுவலகத்திற்கு அழைத்து பதிவு செய்ய முடியும்.
இதே போன்று 091-2228348 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தென் மாகாண அலுவலகத்தையும் , 037-2224337 என்ற இலக்கத்தினூடாக வடமேல் மாகாண அலுவலகத்தையும் , 065-2229449 என்ற இலக்கத்தினூடாக கிழக்கு மாகாண அலுவலகத்தையும் , 024-2227201 என்ற இலக்கத்தினூடாக வடக்கு மாகாண அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM