நாட்டில் கடந்த ஏழு மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 23 சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,கலால் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் ஆகியவற்றின் வருமான நிலையினை ஆராய்ந்ததன் அடிப்படையில் கடந்த வருடத்தை விட வருமானம் அதிகரித்துள்ளது.

 குறித்த மூன்று திணைக்களங்களின் மூலம் குறித்த ஏழு மாத  காலப்பகுதியில் கடந்த வருடம் 6 இலட்சத்து 25  ஆயிரத்து 867 மில்லியன் ரூபாவாக இருந்த வறுமானம்  கடந்த ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 752 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி கடந்த வருடத்தை விட ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாவால் வருமானம் அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.