புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
30 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட யூனியன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 6-ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தைப் போலவே இங்கும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என் ஆர் காங்கிரஸ் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களிலும் ஏனையவை ஒரு இடத்திலும் முன்னணி வகிக்கிறது.
140 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கேரளாவிலும் ஏப்ரல் 6-ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பகல் 01மணி அளவில் நிலவரப்படி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி 89 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
126 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பகல் 01 மணி நேர நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 84 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பகல் 12 மணி நேர நிலவரப்படி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 198 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM