தமிழக தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட திரைப்பட நடிகை குஷ்பூ பின்னடைவை சந்தித்திருக்கிறார். (இன்று நண்பகல் 1.00 வரையான முடிவுகள்)
தமிழக தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் திரைப்பட நடிகை குஷ்பூ போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த மருத்துவர் எழிலன் 8,261 வாக்குகளும், நடிகை குஷ்புவிற்கு 3,908 வாக்குகளும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை குஷ்பு பின்னடைவை சந்தித்து வருகிறார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ட்ரீம்ஸ் மூர்த்தியை விட 900 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் 12,664 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் 5,012 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் 17, 955 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க.வை சேர்ந்த கசாலி 4,075 வாக்குகள் பெற்று பின்தங்கி இருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரான கமல்ஹாசன் 7,074 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் 6,536 வாக்குகள் பெற்று பின் தங்கி இருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியான வானதி சீனிவாசன் 4,597 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி 30,169 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த சம்பத்குமார் 10,766 வாக்குகளை பெற்று பின் தங்கியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM