இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா..!

By J.G.Stephan

02 May, 2021 | 12:48 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியிலிருந்து இடைநடுவில் விலகியிருந்தார். 

கொரோனாவிற்கு எதிராக  என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

மேலும், அஸ்வின் குடும்பத்தில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது என்றுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right